இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மின்னணு பண பரிமாற்றம் மூலம் அரசு கருவூலத்திலிருந்து வங்கிகள் மூலம் அந்தந்த ஊழியரின் வங்கிக் கணக்கிற்கு மாதம்

News image
Updated On :8 ஏப்ரல் 2013, 11:07 am

G.Sundararaj

சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம்  வழங்கப்பட்டது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மின்னணு பண பரிமாற்றம் மூலம் அரசு கருவூலத்திலிருந்து வங்கிகள் மூலம் அந்தந்த ஊழியரின் வங்கிக் கணக்கிற்கு மாதம் ஊதியம் மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் சிதம்பரம் துணைக் கருவூலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சாஃப்ட்வேர் கோளாறினால் மின்னணு பண பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய முடியாமல் போனது.

இதனால் அந்தந்த அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத் தொகையை மொத்தமாக காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த அலுவலக நிர்வாக மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காசோலையை வங்கிக்கு கொண்டு சென்று பணமாக மாற்றி அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டதால் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த மாதம் கூடுதல் சுமை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இனி வரும் காலங்களில் ஊதியம் வழங்கும் மாத இறுதிநாளில் சாஃப்ட்வேர் நல்லமுறையில் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற கோளாறுகள் ஏற்படாமல் இருக்க கருவூல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.