தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஐபிஎல்-6: சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி

முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியபோதும், பின்வரிசை வீரர்கள் விரைவாக வெளியேறியதால் சரிவிலிருந்து தப்ப முடியவில்லை.

News image
Updated On :10 ஏப்ரல் 2013, 5:36 pm

ஏ.வி. பெருமாள்

ஐபிஎல்-6 போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியபோதும், பின்வரிசை வீரர்கள் விரைவாக வெளியேறியதால் சரிவிலிருந்து தப்ப முடியவில்லை.

மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் லாஃப்லினுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியில் மன்தீப் சிங்கும், கில்கிறிஸ்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

டிர்க் நேன்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை அடித்து பஞ்சாபின் இன்னிங்ûஸத் தொடங்கினார் மன்தீப் சிங். அங்கித் ராஜ்புட் வீசிய அடுத்த ஓவரில் கில்கிறிஸ்ட் இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும் டிர்க் நேன்ஸ் வீசிய 3-வது ஓவரில் கில்கிறிஸ்டும், மன்தீப் சிங்கும் ஆட்டமிழந்தனர். இருவரும் தலா 9 ரன்கள் எடுத்தனர்.

டேவிட் ஹசி 41: பின்னர் வந்த மனன் வோரா 11 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா ஓவரில் வோரா சிக்ஸருக்கு விளாசிய பந்தை எல்லையில் அற்புதமாக கேட்ச் செய்தார் மைக் ஹசி.

பின்னர் இணைந்த டேவிட் ஹசி-குர்கீரத் சிங் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தது. 36 பந்துகளைச் சந்தித்த டேவிட் ஹசி 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினால் அபாரமாக கேட்ச் செய்யப்பட்டார்.

குர்கீரத் சிங் 31 ரன்களில் வெளியேற, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. அசார் முகமது, சதீஷ் ஆகியோர் தலா 8 ரன்களிலும், சாவ்லா 4, ரியான் ஹாரிஸ் 0, பிரவீண் குமார் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணி 138 ரன்களுக்கு சுருண்டது.

சூப்பர் கிங்ஸ் தரப்பில் வேயன் பிராவோ 3 விக்கெட்டுகளையும், டிர்க் நேன்ஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பேட்டிங் செய்யக் களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய மைக்கேல் ஹஸி, முரளி விஜய் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக மைக்கேல் ஹஸியின் பேட்டிங்கில் அனல் பறந்தது. அவர் 54 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். விஜய் 50 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் 17.2 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.