மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரம் மாற்றம்

இம்மாதம் 25ம் தேதி நடைப்பெற உள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 12:11 pm

இம்மாதம் 25ம் தேதி நடைப்பெற உள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையானுக்கு 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடைப்பெறுவது வழக்கம். 25ம் தேதி வியாழக்கிழமை பௌர்ணமி அன்று கடைசி நாள் வசந்தோற்சவ விழா என்பதால் அன்றைய தினத்தில் காலை மற்றும் ஈவ்னிங் பிரேக் தரிசனமும், 300ரூ விரைவு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

50ரூ சுதர்ஸன டிக்கெட்கள் முன் பதிவு செய்த 6,800 பேர் மட்டும் அன்றைய தினம் காலை 10 மணிக்குள்ளாக தரிசனத்திற்கு கோவிலுக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறினார். தர்ம தரிசனம் மற்றும் அனைத்து வகையான தரிசனங்களும் மதியம் 1.30 மணிக்கே முடிக்கப்படும்.

அந்நாள் வியாழக்கிழமை ஆனதால் மதியம் 3 மணிக்கு மஹா சுத்தி செய்து பூலங்கி சேவையை சார்த்திய பின் கோவில் மூடப்படும். பிறகு மறுநாள் 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுப்ரபாத சேவைக்கு கோவில் திறக்கப்படும் என்று கூறினார். பக்தர்கள் இந்நேர மாற்றத்திற்கு தக்கபடி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும்படி வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.