இதுகுறித்து பேரறிவாளனை நான் சந்தித்தபோது கூறுகையில் 'எனக்கு உயிர் கொடுத்த தாய் நீங்கள் என்றாலும், மறுவாழ்வு கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்' என அடிக்கடி கூறுவார். பெரும்பாலான உலக நாடுகளில் மரண தண்டனையை தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த மண்ணில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது. எனவே தமிழகத்திலேயாவது மரண தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும். எனது மகனை காப்பாற்ற தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். எனது மனுவை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்பு போல் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து எனது மகனை என்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்தார்.