எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முதலை கடித்து சிகிச்சை பெறும் பள்ளி மாணவருக்கு எம்எல்ஏ ஆறுதல்!

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற பெராம்பட்டு காலனியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் சிவகுரு (14) முதலை கடித்து படுகாயமுற்றார். இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 11:27 am

G.Sundararaj

சிதம்பரத்தில் முதலை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவரை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற பெராம்பட்டு காலனியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் சிவகுரு (14) முதலை கடித்து படுகாயமுற்றார். இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று முதலை கடித்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் சிவகுருவை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் போதிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏவுடன் அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா, தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஜாகீர்உசேன் ஆகியோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.