ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குழந்தை நல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.ரமேஷ் ஸ்பைருலினா (கடல்பாசி) மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் பற்றி அறிவியல் விளக்கமளித்து பேசினார். அவர் பேசியதாவது: சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளியில் 150 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு கடல்பாசி உணவு ஒரு ஆண்டு காலம் அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அக்குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் வளர்ச்சி, புரோட்டீன், வைட்டமின், மினரல் ஆகியவற்றின் அளவு வளர்ச்சியடைந்துள்ளது இச்சோதனை மூலம் தெரியவந்துள்ளது. கடல்பாசி (ஸ்பைருலினா) உணவு ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்க முழு ஊட்டச்சத்தினை உடலிற்கு வழங்குகிறது. இதனை டி.எக்ஸ்.என் (DXN Holdings, Malaysia) என்ற நிறுவனம் தயாரித்து உலகெங்கும் வழங்குகிறது. என டாக்டர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.