எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கடல்பாசி உணவு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு என ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ அறிவியல் கழகம், வசுபால் கிரியேஷன்ஸ் மக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய கடல்பாசி மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் குறித்த அறிவியல் ஆய்வுக்கூட்டம்

News image
Updated On :13 ஏப்ரல் 2013, 9:56 am

G.Sundararaj

கடல்பாசி (ஸ்பைருலினா) உணவு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 3 கிராம் கடல்பாசியில் ஒரு கிலோ காய்கறி மற்றும் பழங்களின் அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குழந்தை நல மருத்துவர் பேராசிரியர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ அறிவியல் கழகம், வசுபால் கிரியேஷன்ஸ் மக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய கடல்பாசி மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் குறித்த அறிவியல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவ அறிவியல் கழகச் செயலாளர் ஜே.கபாலிமூர்த்தி வரவேற்றார். டாக்டர் கே.என்.வசுப்பாலயா, டாக்டர் ரத்தினா வசுப்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மலேசியா நாட்டின் டிஎக்ஸ்என் நிறுவனத் தலைவர் டாக்டர் லிம்சியோ ஜின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குழந்தை நல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.ரமேஷ் ஸ்பைருலினா (கடல்பாசி) மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் பற்றி அறிவியல் விளக்கமளித்து பேசினார். அவர் பேசியதாவது: சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளியில் 150 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு கடல்பாசி உணவு ஒரு ஆண்டு காலம் அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அக்குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் வளர்ச்சி, புரோட்டீன், வைட்டமின், மினரல் ஆகியவற்றின் அளவு வளர்ச்சியடைந்துள்ளது இச்சோதனை மூலம் தெரியவந்துள்ளது. கடல்பாசி (ஸ்பைருலினா) உணவு ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்க முழு ஊட்டச்சத்தினை உடலிற்கு வழங்குகிறது. இதனை டி.எக்ஸ்.என் (DXN Holdings, Malaysia) என்ற நிறுவனம் தயாரித்து உலகெங்கும் வழங்குகிறது. என டாக்டர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இந்திய மருத்துவக்கழகத் தலைவர் ஆர்.பாஸ்கரன், டாக்டர் செல்வமுத்துக்குமரன், டாக்டர் பாலசந்தர், டி.எக்ஸ்.என் உறுப்பினர் ஷெக்மொகைதீன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், டி.எக்ஸ்.என் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எம்.மணிவாசகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.