பின்னர் காட்டுமன்னார்கோயிலில் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் மத்தியஅரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் விஜயன், மூப்பனார் பேரவைத் தலைவர் மணிமொழி, வட்டாரத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் தலைவர் கே.வி.இளங்கீரன் வரவேற்றார். விழாவில் நவசக்தி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநரும், ராஜீவ்காந்தி கல்வி நிறுவனத் தலைவருமான கே.ஐ.மணிரத்தினம் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் குணசேகரன், லால்பேட்டை முன்னாள் நகரத் தலைவர் அய்யூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்தினவேல் நன்றி கூறினார்.