எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கடலூர்-ஸ்ரீபெரும்புதூர் வரை ஜோதியுடன் பிரசார பயணம்: காங்கிரஸ் பிரமுகர் தகவல்

ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ்காந்தி படுகொலை பற்றியும், மத்தியஅரசின் சாதனையை விளக்கியும் வருகிற மே.10-ம் தேதி கடலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து காங்கிரஸாருடன் ஜோதியுடன்

News image
Updated On :15 ஏப்ரல் 2013, 10:51 am

G.Sundararaj

ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ்காந்தி படுகொலை பற்றியும், மத்தியஅரசின் சாதனையை விளக்கியும் வருகிற மே.10-ம் தேதி கடலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து காங்கிரஸாருடன் ஜோதியுடன் ஸ்ரீபெரும்புதூர் வரை பயணம் மேற்கொள்ளவுள்ளோம். இந்த பயணம் வருகிற மே.21-ம் தேதி ராஜீவ்காந்தி நினைவு தினத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் சென்றடைகிறது என தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோயிலில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழர்களுக்கு எதிரான கட்சி அல்ல. ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த கட்சி. காங்கிரஸ் கட்சி மீது வேண்டுமென்றே சிலர் வீன் பழி சுமத்துகின்றனர். அதனை முறியடிக்க தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும், மத்திய அரசின் சாதனைகளை விளக்கியும், இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த உதவிகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளோம் என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயிலில் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் மத்தியஅரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் விஜயன், மூப்பனார் பேரவைத் தலைவர் மணிமொழி, வட்டாரத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் தலைவர் கே.வி.இளங்கீரன் வரவேற்றார். விழாவில் நவசக்தி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநரும், ராஜீவ்காந்தி கல்வி நிறுவனத் தலைவருமான கே.ஐ.மணிரத்தினம் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் குணசேகரன், லால்பேட்டை முன்னாள் நகரத் தலைவர் அய்யூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்தினவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.