ஆரணியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியில் உள்ள காணியப்பா சமுதாய கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியில் உள்ள காணியப்பா சமுதாய கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ் ஆரணியில் உள்ள காணியப்பா சமுதாய கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இலவசமாக அளிக்கப்பட உள்ள இந்த கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சியானது மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள், வேலையில்லா இளைஞர்கள், கல்வியை தொடர முடியாமல் இடையில் நின்ற மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
தையல் பயிற்சிக்கு 5ஆம் வகுப்பு படிப்பும், கம்ப்யூட்டர் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு படிப்பும் தேவை என்றும், இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் ஆரணி, இருக்கம் தெருவில் உள்ள காணியப்பா சமுதாய கல்லூரிக்கு தங்கள் குடும்ப அட்டை, கல்வி சான்றிதழ் மற்றும் 3 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என்றும் பயிற்சி காலத்தில் பயணப்படி மற்றும் ஊக்கத்தொகை ஏதும் நிர்வாகத்தால் வழங்கப்பட மாட்டாது எனவும் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு ஆரணி காணியப்பா சமுதாய கல்லூரியை 044-27927493, 7708781075, 9789446438, 8056524887, 8056548883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...