இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாளை முதல் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர்

News image
Updated On :27 ஏப்ரல் 2013, 1:40 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்புவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் நிறுத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பருவமழை பொய்தத்தாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி வெறும் 75.80 மில்லியன் கனஅடியாக குறைந்தது.

இதனால் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்து அனுப்ப முடியாமல் போனதால்  நாளை காலை முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று வரை சென்னை குடிநீர் வாரியத்திற்கு குறைந்தளவான விநாடிக்கு 18 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.