மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

நின்றிருந்த லாரி மீது வாகனம் மோதல்: ஓட்டுநர் சாவு

மதுரையில் இருந்து-திருநெல்வேலிக்கு லாரி அதிகாலையில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியில் கிருஷ்ணதாஸ்(52) அமர்ந்திருக்க, சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்து கொண்டு போது

Updated On :30 ஏப்ரல் 2013, 9:12 am

விருதுநகரில் நின்றிருந்த லாரி மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

மதுரையில் இருந்து-திருநெல்வேலிக்கு லாரி அதிகாலையில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியில் கிருஷ்ணதாஸ்(52) அமர்ந்திருக்க, சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்து கொண்டு போது விருதுநகர் ஆட்சியர் அலுவலகம், செவல்பட்டி விலக்கருகே வரும் போது டயர் பழுதாகி நின்றது. உடனே, கீழே இறங்கிய சண்முகநாதன் சுற்றிப் பார்த்தனர்.

அப்போது, திருநெல்வேலியிலிருந்து-விருதுநகருக்குள் வந்த லாரி 4 வழிச்சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு நின்றிருந்த லாரி மீது மோதியதில் சண்முகநாதன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி கிளீனர் கிருஷ்ணதாஸ் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவகங்கையைச் சேர்ந்த லாரி டிரைவர் பச்சேந்திரனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.