எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனவர்கள் சிறைபிடிப்பு : காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 7:03 am

செல்வ முத்துகுமாரசாமி

நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் இன்று ஒரு நாள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது.

இந்த நிலையில், நேற்று நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 400 விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி உடனடியான இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என காரைக்கால் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.