சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து நிறுத்தம்

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் கடந்த 2012 ம்ஆண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி தடை விதித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள சரணாலயங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2013, 8:50 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட படகு போக்குவரத்து, வனத்துறையின் உத்தரவை தொடர்ந்து இன்று நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் கடந்த 2012 ம்ஆண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி தடை விதித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள சரணாலயங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகமும் மூடப்பட்டது.தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புதிய நெறிமுறைகளை உருவாக்கியதை அடுத்து நிபந்தனைகளுடன் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து உள்ளூர் ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ம் தேதி புலிகள் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பாபநாசம் அணை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் படகு போக்குவரத்து தொடங்க வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. பாணத்தீர்த்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இதனிடையே கடந்த மார்ச் மாதம் 2 ம் தேதி நடைபெற்ற உள்ளூர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பாபநாசம் அணையில் படகு சவாரி தொடங்க முடிவு செய்யப்பட்டது.அணையில் படகுகளை இயக்க தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பாபநாசம்,காரையார் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனனர்.இதற்கு தனியார் படகு உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் அணையில் படகு போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதனிடையே தனியார் படகு உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பாபநாசம் அணையில் தனியார் படகு உரிமையாளர்கள் 15 படகுகளை மட்டும் இயக்கலாம் என தெரிவித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அணையில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

அணையில் படகு போக்குவரத்து தொடங்கிய போதிலும் அக்கரையில் உள்ள பாணத்தீர்த்த அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் அணையை மட்டும் கண்டு ரசித்தனர்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வனத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் படகு உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புலிகள் காப்பக கள இயக்குநர் டோக்ரா, துணை இயக்குநர் சி. குருசாமிமற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.படகு சவாரி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் அணையில் படகுகளை இயக்க வனத்துறை தடைவிதித்ததை அடுத்து போக்குவரத்து இன்று நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.