திருவள்ளூர் அருகே இருவேறு இடங்களில் நெடுஞ்சாலைப் பள்ளத்தில் பைக்கில் இருந்து விழுந்த 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கன்னியப்பனின் மனைவி ஜெனோவா (56). இவர் தனது மகள் சைரேகா உடன் ஞாயிற்றுக்கிழமை அன்று திருவள்ளூர் நோக்கி ஸ்கூட்டியில் வந்துக் கொண்டிருந்தார்.ஸ்கூட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முருகஞ்சேரி அருகே வந்தபோது நெடுஞ்சாலைப் பள்ளத்தில் பைக் நிலை தடுமாறியதில் தாய், மகள் இருவரும் கீழே விழுந்தார்கள்.இதில் ஜெனோவாவுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மற்றொரு சம்பவம்: திருவள்ளூரை அடுத்த ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானமணியன் மகன் மோகன் (44). இவர் மாங்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூரில் இருந்து ஒதிக்காடு நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஈக்காடு அருகே நெடுஞ்சாலைப் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து மோகன் இறந்தார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

காவல் துறை வாகனங்கள்: ஆணையா் அமல்ராஜ் ஆய்வு

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


