சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி, ராமநதி அணைகள் 2 முறை நிரம்பியது. கடந்த 2

News image
Updated On :5 ஆகஸ்ட் 2013, 11:53 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதை தொடர்ந்து சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.

நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி, ராமநதி அணைகள் 2 முறை நிரம்பியது. கடந்த 2 தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 17 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ்அணையில் 25 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 8 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 17.4 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 2மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3015.16 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.10 அடி உயர்ந்து 127.85 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு 1504.75 கனஅடி திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 133.20 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 106 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகு பாசனத்திற்கு 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.30 அடி உயர்ந்து 80.80 அடியாக இருந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் 125 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76.75 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 195 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.