டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சுகுமார்(43) என்பவரின் வீட்டின் கதவை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2013, 9:13 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சுகுமார்(43) என்பவரின் வீட்டின் கதவை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணிகள் எடுத்து செய்து வருகிறார். இவரது மகளின் படிப்பிற்காக தச்சூர் பகுதியில் கடந்த 3 மாதமாக மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். அவ்வப்போது புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள வீட்டிற்கு இவர்கள் வந்து போவதுண்டு.

இந்நிலையில் இவரது வீடு வெள்ளிக்கிழமை பூட்டப்பட்டு இருந்த நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மாடி வழியே மாடிப்படிக்கட்டு பகுதியில் இருந்த கிரில் கதவை உடைத்து முன்புறம் இருந்த பெரிய தேக்கு மரக் கதவை பெயர்த்து வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களில் இருந்த 8 சவரன் தங்க நகை, 20ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த மர்ம நபர்கள் அங்கிருந்து நழுவியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வீட்டிற்கு வந்த சுகுமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளதை அறிந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது வழக்கு சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.