டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டி அருகே 1 டன் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த

News image
Updated On :10 ஆகஸ்ட் 2013, 9:12 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் பகுதியில் 1 டன் மதிப்புள்ள செம்மரங்களை பாதிரிவேடு போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த தகவலின் பேரில் பாதிரிவேடு சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மாநெல்லூர் இருளர் காலனி பகுதிக்கு சென்று சோதனையிட்டார். இந்த சோதனையில் புதர் மண்டிய பகுதியில் கொட்டகை அமைக்கப்பட்டு அதில் செம்மரத்துண்டுகள் பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து செம்மரங்களை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் செம்மரங்களை பதுக்கியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.