மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மயிலாடுதுறையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நூதனப் போராட்டம்

மயிலாடுதுறையில் நிலத்தடி நீர்,  ஆயில்  என்ஜின்  மூலம்  உறிஞ்சப்பட்டு விற்பனை  செய்யப்படுவதை கண்டித்து, இன்று ஒருவர் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2013, 7:50 am

அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறையில் நிலத்தடி நீர்,  ஆயில்  என்ஜின்  மூலம்  உறிஞ்சப்பட்டு விற்பனை  செய்யப்படுவதை கண்டித்து, இன்று ஒருவர் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை நகரம், வாத்துக்காரத் தெருவில் தனியாருக்கு சொந்தாமன    இடத்தில் ஆழ்குழாய் பதிக்கப்பட்டு,ஆயில்  என்ஜின் மூலம்  நிலத்தடி  நீர்  உறிஞ்சப்பட்டு விற்பனை செய்பட்டு  வருகின்றது.

இதனால் அந்த  பகுதியில்  நிலத்தடி  நீர்மட்டம்  குறைந்து வருவதுடன், கைபம்பு மூலம் தண்ணீர் எடுக்கமுடியவில்லையாம். இது குறித்து  மயிலாடுதுறை  நகரம் வாத்துக்காரத்தெருவில் வசிக்கும் கு.  ஆரோக்கியசாமி (62) என்பவர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நாகை மாவட்ட  ஆட்சியர் மற்றும்  மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றிற்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைத் கண்டித்து, ஆரோக்கியசாமி சுத்திரதின நாளான  வியாழக்கிழமை தனது வீட்டில்  கருப்புக்கொடி கட்டி,  தண்ணீர் வராத கைப்பம்பினை நட்டு, நிலத்தடி  நீருக்கு சமாது கட்டி, பூப்போட்டு,ஒப்பாரி பாடல்களை  ஒளிப்பரப்பி  நூதன  போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து   ஆரோக்கியசாமி கூறியது: பொதுமக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்படும் நிலையில்  கடந்த 2 ஆண்டுகளுக்கு வாத்துக்காரத் தெருவில் ஆயில் என்ஜின் மூலம் நிலத்தடி  நீர் உறிஞ்சப்பட்டு, நகரில்  வணிக நிறுவனங்களுக்கு  விற்பனை  செய்யப்பட்டு வருகின்றது.

 இது குறி்த்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவி்த்தும் நடவடிக்கை  டுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரு்க்கு 6 முறை புகார் மனுக்கள்  அளிக்கப்பட்டும் நடவடிக்கையில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.