எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வினோதினி மீது ஆசிட் வீசியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்த வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷுக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2013, 5:47 am

செல்வ முத்துகுமாரசாமி

சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்த வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷுக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டு, அவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

அதில், ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை செய்ய முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,வினோதினியின் தந்தை ஜெயபால் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது குறித்த வழக்கில், சுரேஷுக்கு மேலும் நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி விட்டு நவம்பர் 14ம் தேதி  காரைக்காலில் இருந்து சென்னை திரும்ப பேருந்து நிலையத்துக்கு வந்த வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினான். இதில் படுகாயம் அடைந்த வினோதினி, மருத்துவ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 12ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.