மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் விபத்து: ஒப்பந்தத் தொழிலாளர் 4 பேர் மயக்கம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2013, 8:58 am

இன்பராஜ்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3வது யூனிட்டில் பாய்லருக்கு நிலக்கரி கொண்டு செல்லும் இயந்திரத்தில் சில நாட்களுக்கு முன் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு இளநிலைப் பொறியாளர் மரிய அந்தோணி (45) தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, பழுது நீக்கும் பணி நடைபெற்றது. கொல்லம் பரம்புவைச் சேர்ந்த ஜெயதுரை என்பவரின் மகன் ஆனந்தகுமார் (24), பிச்சையா என்பவரின் மகன் முத்துராஜ்(25), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த இருதயம் என்பவர் மகன் விஜயகுமார்(22) என ஒப்பந்தத் தொழிலாளர்க ள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது நிலக்கரி கொண்டு செல்லும் இயந்திரத்தின் மூடி திடீரெனக் கழன்று விழுந்ததில், அதில் இருந்து சாம்பல்வெளியே கொட்டியுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் 4 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து 4 பேரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.