அம்பை: சொத்து தகராறில் இரட்டைக் கொலையா?: 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை
அம்பாசமுத்திரத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற அரசு டாக்டர், அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான


அம்பாசமுத்திரத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற அரசு டாக்டர், அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பாசமுத்திரம் தெற்கு மாடத் தெருவை சேர்ந்த பூ. அருள் (74). திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசியில் பணி செய்து ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். இவரது மனைவி ஜான்சிராணி (65). இத்தம்பதியின் மூத்த மகள் ஜாய்புவனா குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். 2 வது மகள் முத்துப்ரியா குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
முக்கூடலை சேர்ந்த அருள் தனது மனைவியுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக அம்பாசமுத்திரத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்தார். இருவரும் பட்டப்பகலில் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.ஜான்சிராணி அணிந்திருந்த 9 பவுன் எடையுள்ள சங்கிலி, இரண்டரை பவுன் வளையல்களை மட்டும் கொலையாளிகள் திருடி சென்றுள்ளனர். வீட்டு பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள 30 பவுன் எடையுள்ள தங்கநகைகள், பணம் ஆகியவற்றை கொலையாளிகள் எடுக்கவில்லை.
பணம், நகைக்காக கொலை செய்திருந்தால், பீரோவில் இருந்த நகைகளையும் கொலையாளிகள் எடுத்து சென்றிருக்க வேண்டும். சொத்து பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் தடவியல் நிபுணர் பதிவு செய்த ரேகைகள், தடயங்களை வைத்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சந்தேகத்தின்பேரில், கொலை நடைபெற்ற வீட்டின் அருகில் சில தினங்களாக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...