வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை: பாபநாசம் அணையில் 1,000 கனஅடி நீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. பாசனத் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவை 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2013, 6:40 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. பாசனத் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவை 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிசான பருவ சாகுபடி பணிகள் தாமிரவருணி பாசனத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வடகிழக்கு பருவ மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மி.மீட்டரில்): பாபநாசம் அணையில் 17, சேர்வலாறு அணையில் 7, மணிமுத்தாறு அணையில் 11.4, கடனாநதி அணையில் 12, ராமநதி அணையில் 4, வடக்கு பச்சையாறு அணையில் 6.8, நம்பியாறு அணையில் 20, கொடுமுடியாறு அணையில் 7 மழையும் பதிவாகியிருந்தது.

இது தவிர அம்பாசமுத்திரத்தில் 6.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 5 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 10.4 மி.மீ மழையும், களக்காட்டில் 6.8 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 6.4 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 23 மி.மீ மழையும், தென்காசியில் 5.2 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 4.2 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 15 மி.மீ மழையும், நான்குனேரியில் 17 மி.மீ மழையும் பெய்துள்ளது.

பாசனத்திற்கு 1,000 கனஅடி திறப்பு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 547.92 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து சாகுபடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு பாசனத்திற்கு 35 கனஅடியும், கடனாநதி அணை, ராமநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பாசனத்திற்கு தலா 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104.17 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.07 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 68.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 61.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 61.68 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 118.50 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.