சங்குகுளி மீனவர் கடலில் மூழ்கி சாவு
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த தொம்மை பிச்சை மகன் டேவிட் கால்வின் (22). இவர் நவீன சங்குகுளி தொழிலாளி. திரேஸ்புரத்தில் இருந்து புனித அந்தோனியார் என்ற நாட்டுப்படகில் சங்குகுளிக்க 9


தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடுக்கடலில் சங்குகுளித்த மீனவர் மூச்சுதிணறி உயிரிழந்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த தொம்மை பிச்சை மகன் டேவிட் கால்வின் (22). இவர் நவீன சங்குகுளி தொழிலாளி. திரேஸ்புரத்தில் இருந்து புனித அந்தோனியார் என்ற நாட்டுப்படகில் சங்குகுளிக்க 9 மீனவர்களுடன் டேவிட் கால்வின் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றார்.அப்போது தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கிழக்கே 11 கடல் மைல் தொலைவில் அவர்கள் சங்குகுளித்து கொண்டிருந்தபோது, ஆழ்கடலில் நவீன சிலின்டரை பயன்படுத்தி சங்குகுளித்துக் கொண்டிருந்த டேவிட்டுக்கு திடீரென மூச்சுதினரல் ஏற்பட்டுள்ளது.
வாய் மற்றும் மூக்கில் ரத்த கசிவு மயங்கிய அவரை உடன் இருந்த மீனவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். டேவிட் கால்வினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...