மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் 8 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனை

தூத்துக்குடியில் தனியார் இறால்  ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் நட்சத்திர ஹோட்டல் என ஒரே நேரத்தில் 8 இடங்களில் 100 வருமான வரிதுறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி

News image
Updated On :17 டிசம்பர் 2013, 10:50 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் தனியார் இறால்  ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் நட்சத்திர ஹோட்டல் என ஒரே நேரத்தில் 8 இடங்களில் 100 வருமான வரிதுறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்க்கொண்டனர். இந்த சோதனையின்போது,  கிலோ கணக்கில் தங்கம், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவனங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது

தூத்துக்குடியில் இறால் மீன் ஏற்றுமதியின் முன்னணியிóல திகழும் டயமன்ட் சீ புட் (டிஎஸ்எப்) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றும் வி.இ. சாலையில் உள்ளது. இந்நிலையில், டிஎஸ்எப் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மனோகரன், துரைராஜ், பால்பாண்டி, சந்திரன் ஆகியரது வீடுகள் மற்றும்  தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை, எட்டையபுரம் சாலை,  சிப்காட், அந்தோனியார்புரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இறால் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மற்றும் வனிகவளாகம் என மொத்தம் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை அதிரயாக சோதனை மேற்க்கொண்டனர்.

வருமான வரித்துறை புலணாய்வுப் பரிவு இணை இயக்குநர் (கோவை) ரமணபாபு, வருமான வரித்துறை துணை இயக்குநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் 15 கார்களில் வந்த 100 அதிகாரிகள் ஒரே நேரத்தில் 8 இடங்களில் சோதனை மேற்க்கொண்டனர்.  தூத்துக்குடி இஞ்ஞாசியார்புரத்தில் உள்ள டிஎஸ்எப் நிறுவன உரிமையளர்கள் மனோகரன், துரைராஜ், அந்தோனியார்புரத்தில் உள்ள பால்பாண்டியன், சந்திரன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்த அதிகாரிகள் மேற்கொண்டபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம்.

இருப்பினும், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையை மேற்கொண்டபோது வீடுகளில வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ இரண்டரை கிலோ தங்கம், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும்  முக்கிய ஆவனங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதுதவிர, நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்தும் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களை உரிமையாளர்களிடம் காட்டிய அதிகாரிகள் அதற்கான ஆவணங்களில் கையெழுத்தை பெற்றுக் கொண்டு விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித் தறை அதிகாரிகள் சென்னைக்கு கொண்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.