மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் 3வயது குழந்தையை கொன்ற தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி புதியம்புத்தூர் அருகே 3வயது குழந்தையை கொன்ற தம்பதியினருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறினார்.

News image
Updated On :19 டிசம்பர் 2013, 8:07 am

இன்பராஜ்

தூத்துக்குடி புதியம்புத்தூர் அருகே 3வயது குழந்தையை கொன்ற தம்பதியினருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தூத்துக்குடி புதியம்புத்தூரைச் சேர்ந்த உத்திரை செல்வன் வயது 30 இவர் மனைவி சரிதா வயது 28 சரிதாவுக்கு திருமனத்துக்கு முன்பே பிறந்த குழந்தை பாரதிதாசன் என்ற லிவிங்ஸ்டன் வயது 3 இந்த குழந்தையை கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி அன்று பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதோடு புதியம்புத்தூரில் உள்ள சிறிய பாலத்தில் இருந்து தூக்கி விசியுள்ளனர்.

இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதி எம்.பால்துரை இன்று இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.