மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புதுக்கோட்டை: வரதட்சனை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமணம் நிச்சயம் செய்தபிறகு பெண்ணிற்கு வயது அதிகம் என்று வரதட்சனை அதிகம் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டாரை செவ்வாய்க்கிழமை

News image
Updated On :24 டிசம்பர் 2013, 2:00 pm

பார்திபன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமணம் நிச்சயம் செய்தபிறகு பெண்ணிற்கு வயது அதிகம் என்று வரதட்சனை அதிகம் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டாரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காட்டைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது மகள் மதினா(28). இவருக்கும் புத்தாம்பூரைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அபுபக்கர்சித்திக்(29) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி நாளை டிச.25-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் நிச்சயம் செய்தது முதல் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு மாப்பிள்ளையைவிட வயது அதிகம் என்று சர்ச்சையை கிளப்பி பேசியதை விட கூடுதல் வரதட்சனை கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளனர்.

நாளை  திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் எந்த ஏற்பாட்டையும் மணமகன் வீட்டார் செய்யவில்லை.  இதுபற்றி கேட்டதற்கு திருமணம் நடக்காது என்று கூறியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார்,உறவினர்கள் பலர் பேசியும் மணமகன் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.இதனால் மனமுடைந்த மதினா இதுகுறித்து ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அப்துல் சித்திக்கின் அண்ணன்கள் அயூப்கான், முகமது சக்கரியா, சகுபர்அலி, அக்கா பரக்கத் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மணமகன் அபுபக்கர்சித்திக்,அவரது அம்மா ரகிமாபீவி ஆகியோரை தேடி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.