அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை வரும் 28 ஆம் தேதி ராம் லீலாவில் பதவியேற்பு
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி தலைமைச் செயலாளர் இன்று சந்தித்தார். அப்போது ஆட்சியமைப்பது குறித்தும் பதவியேற்பது குறித்து ஆலோசனை


ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி தலைமைச் செயலாளர் இன்று சந்தித்தார். அப்போது ஆட்சியமைப்பது குறித்தும் பதவியேற்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அக்கட்சி வெளியிட்டுள்ள குறிப்பில், வரும் 28 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆதரவுடன் பதவியேற்கும் ஆம் ஆத்மி பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் 700 லிட்டர் குடிநீர் கொடுப்போம்ன என கூறியுள்ளது. ஜன்லோக்பாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். என்றும், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி அக்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றபின் அவர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பது தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...