அடையாளம் தெரியாத வாகனம் மோதி முருக பக்தர் சாவு: 6 பேர் காயம்
தூத்துக்குடி அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற முருபக்தர்கள் கூட்டத்துக்குகுள் சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 6 பேர்


தூத்துக்குடி அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற முருபக்தர்கள் கூட்டத்துக்குகுள் சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 6 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்டம் நாகமலை மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சோந்த முருகபக்தர்கள் 52 பேர் பாதயாத்திரையாக கடந்த 25-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டனர். இதில் 17 பேர் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட முன்னேர்ப்பாடு பணிகளை கவனிக்க வேனில் சென்று விட்டனர்.மீதமுள்ள 36 பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். இவர்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நடந்துச் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பக்தர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இந்த விபத்தில் நாகமலையை சோந்த பாலமுருகன் (29) சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்தர்கள் மீது மோதியது வேன் என காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...