ஜார்கண்ட் வளர்ச்சிக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை: மோடி
ஜார்கண்ட் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஜார்கண்டில் அனைத்து வளங்கள் இருந்தும் பின்தங்கியே வளர்ச்சியே இருக்கிறது. மாநிலங்களின் முன்னேற்றத்திறகு


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:
ஜார்கண்ட் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஜார்கண்டில் அனைத்து வளங்கள் இருந்தும் பின்தங்கியே வளர்ச்சியே இருக்கிறது. மாநிலங்கங்களின் முன்னேற்றத்திற்கு மத்தியஅரசின் பங்கு மிக அவசியம். ஆனால் ஜார்கண்ட் வளர்ச்சிக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
ஜார்கண்ட், சட்டீஸ்கரை விட முன்னேற்றத்தில் பின்தங்கியிருக்கிறது. சட்டீஸ்கர் முன்னேறியதற்கு பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கியதே காரணம். நாங்கள் வாஜ்பாய் ஆட்சியை இங்கு கொண்டுவர நினைக்கிறோம். இந்த மாநிலம் உருவானதில் வாஜ்பாய்க்கு முக்கிய பங்கு உண்டு.
ஜார்கண்டில் உத்தரகாண்ட் போல நிலையான அரசிய்ல தன்மை ஏற்பட்டிருந்தால் வளர்சசி பெற்ற மாநிலமாக இருந்திருக்கும். நாங்கள் மக்களின் வளர்ச்சி மற்றும் நன்மையை மட்டும் பார்க்கிறோம். ஜார்கண்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்களை தேர்ந்தெடுங்கள் இங்கு பெரும் பிரச்சனையாக உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை மாற்ற் காட்டுகிறோம். மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை. இவ்வாறு மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...