ஸ்ரீவிலி. அருகே ஓசி சிகரெட் தராதவரை கல்லால் தாக்கியவர் கைது
வத்திராயிருப்பு, கோட்டையூர்-இலந்தைக்குளம் விலக்கில் கோட்டையூர், பசும்பொன்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலாஜி (19) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இரவது


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓசி சிகரெட் தராத இளைஞரை கல்லால் அடித்து காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு, கோட்டையூர்-இலந்தைக்குளம் விலக்கில் கோட்டையூர், பசும்பொன்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலாஜி (19) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இரவது கடைக்கு வந்த இலந்தைக்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் வீரஅழகு (53) என்பவர் சிகரெட் கேட்டுள்ளார். பாலாஜி அதற்கு பணம் கேட்டுள்ளார். என்னிடமே பணம் கேட்பாயா? என்று வீர அழகு மிரட்டினாராம். அப்போதும் சிகரெட் தர பாலாஜி மறுக்கவே, அங்கிருந்த கல்லால் வீர அழகு பாலாஜியை தாக்கியுள்ளார். இதில் காயமுற்ற பாலாஜி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதார். வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீர அழகுவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...