5-ம் வகுப்பு கணக்கு சமச்சீர் புத்தகத்தில் தவறுகள்: திருத்தம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தமிழக அரசு மூன்றாம் பருவத்திற்கு 5-ம் வகுப்பிற்கு அச்சிட்டு வெளியிட்டுள்ள கணிக்கு புத்தகத்தில் பல தவறுகள் உள்ளதாயும்,


தமிழக அரசு மூன்றாம் பருவத்திற்கு 5-ம் வகுப்பிற்கு அச்சிட்டு வெளியிட்டுள்ள கணிக்கு புத்தகத்தில் பல தவறுகள் உள்ளதாயும், இதனை பள்ளிக் கல்வித்துறை திருத்தம் செய்து வரும் கல்வியாண்டில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை, இலவசப் பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்களை வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு மூன்றாம் பருவத்திற்கு 5-ம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் பல்வேறு தவறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
25-ம் பக்கத்தில் செய்துபார் என்ற தலைப்பில் iii கணக்கில் 50 கி.மீ 300 மீ. - 20கி.மீ 600 செ.மீ. என உள்ளது. இது 600 மீட்டர் என இருக்க வேண்டும். அதற்கு கீழேயுள்ள 2-ம் கணக்கு 860 கி.மீ. 750 மீ - 900 கி.மீ. 300 மீ என உள்ளது. பெரிய எண்ணில் இருந்துதான் சிறிய எண்ணைக் கழிக்க இயலும். எனவே பெரிய எண்ணாகிய 900 கி.மீ. 300 மீ. என்பது முன்னால் வர வேண்டும்.
26-ம் பக்கத்தில் உள்ள 2-வது எடுத்துக்காட்டு கணக்கில் ரிப்பனின் அளவு 10 மீ. அதில் 2 மீ 500 செ.மீ. வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளது. 500 செ.மீ. என்பதே 5 மீட்டர் என்று வந்துவிடும். ஆனால் கீழே அவர்கள் செய்து காட்டியதில் சரியாக 50 செ.மீ. என போட்டுள்ளார்கள்.
27-ம் பக்கத்தில் செய்து பார் என்று மேலே உள்ள கணக்கில் 6 கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 மற்றும் 6-ம் கணக்குகள் ஒரே கணக்குகள்.
இதே போல் 15-ம் பக்கத்தில் கீழே உள்ள கழித்தல் எடுத்துக்காட்டு கணக்கில் 60 கி.கி. பருப்பு என்றுள்ளது. ஆனால் கீழே செய்து காட்டியதில் 65 என்று போட்டு கழித்துள்ளார்கள். இது போன்று பல்வேறு தவறுகள் கணக்கு புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் உள்ளது என்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தருகிறோம் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் கூறிவரும் நிலையில் இதுவரை இதுபோன்ற தவறுகளை ஆசிரியப் பயிற்றுநர்கள் கண்டு திருத்தங்களை ஆசிரியர்களுக்கு கூறாதது ஆச்சரியமாக உள்ளது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளரை குழுத் தலைவராக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பாடப்புத்தகத்தில், புத்தகங்களை மாணவர்களுக்கு கொடுக்கும் முன்பு அச்சுப் பிழையை ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் பாடநூல் குழுவினர் வாசித்துப் பார்த்து தந்திருக்க வேண்டும். வரும் கல்வியாண்டிலாவது இதுபோன்ற பெரிய பெரிய தவறுகள் இல்லாமல் அரசு புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...