/

வட்டாட்சியர் கையொப்பமிட்டு போலி வாரிசு சான்றிதழ் தயாரித்தவர் கைது

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான் (30). இவது தாயார் சலீமாபீவி 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின்னர் வாரிசு சான்றிதழ் கேட்டு காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து 8

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 12:00 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே வட்டாட்சியர் கையொப்பமிட்டு போலி வாரிசு சான்றிதழ் தயாரித்தவரை போலீஸார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான் (30). இவது தாயார் சலீமாபீவி 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின்னர் வாரிசு சான்றிதழ் கேட்டு காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து 8 பெயர்களுடன் வாரிசு சான்றிதழ் பெற்றார். அதன் பின்னர் குடும்பத்தினர் 3 பேர் இறந்துவிட்டனர்.

அதன் பின்னர் அப்துல்ரஹ்மான், தனது குடும்பத்தினரை 5 பெயர்களை டைப் செய்து வட்டாட்சியர் தில்லை கோவிந்தன் கையெழுத்தை தானே போட்டு போலி வாரிசு சான்றிதழ் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அப்துல்ரஹ்மான் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று போலி சான்றிதழில் கோபுர முத்திரை போடுமாறு கேட்டுள்ளார். அப்போது சந்தேகமடைந்த வட்டாட்சியர் அலுவலக ஊழியர் சான்றிதழை சரிபார்த்த போது போலி என தெரிந்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அப்துல்ரஹ்மானை ஒப்படைத்தார்.

இதனையடுத்து காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் தில்லைகோவிந்தன் தனது கையெழுத்திட்டு போலி ஆவனங்கள் தயாரித்ததாக அப்துல்ரஹ்மான் மீது காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து, அப்துல்ரஹ்மானை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.