/

வடஇந்திய கலாசாரத்தால் முகம்சுளித்த சிதம்பரம் நகர மக்கள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பீகார், ஜார்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணாமலைநகர் பகுதியில் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளான கொத்தங்குடித்தோப்பு, மாரியப்பாநகர், முத்தையாநகர், கே.ஆர்.எம்.நகர், வடக்கிருப்பு ஆகிய பகுதிகளை வடஇந்தியாவில் விமரிசியாக கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 11:36 am

G.Sundararaj

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த வடஇந்திய மாணவர்கள் வசந்த பஞ்சமி விழாவை கலர் பொடி தூவியும், மதுபாட்டில்களுடன் ஊர்வலமாக சென்றது நகர மக்களை முகம்சுளிக்க வைத்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பீகார், ஜார்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணாமலைநகர் பகுதியில் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளான கொத்தங்குடித்தோப்பு, மாரியப்பாநகர், முத்தையாநகர், கே.ஆர்.எம்.நகர், வடக்கிருப்பு ஆகிய பகுதிகளை வடஇந்தியாவில் விமரிசியாக கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி விழாவை முன்னிட்டு 6 இடங்களில் சரஸ்வதி சிலை வைத்து கொண்டாடினர். சனிக்கிழமை மாலை சிலைகளை கரைக்க கொள்ளிடம் ஆற்றிற்கு சிதம்பரம் நகரம் வழியாக போலீஸார் பாதுகாப்புடன் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். அப்போது பொதுமக்கள் மீதும், குறிபபாக பெண்கள் மீதும் கலர்பொடிகளை தூவியும், மதுபாட்டில்களை குடித்துக் கொண்டு சென்றதை கண்டு மக்கள் முகம்சுளித்து அச்சத்துடன் சென்றனர்.

ஏதாவது அசம்பாவிதம் சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என கடந்த ஆண்டு வடஇந்திய மாணவர்கள் ஊர்வலம் செல்லவும், கொள்ளிடம் ஆற்றில் சிலைகளை கொண்டு சென்று கரைக்கவும் போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு சிலை வைத்து கொண்டாடவும், ஊர்வலம் செல்லவும் போலீஸார் அனுமதி கொடுத்ததால் பொதுமக்களுக்கு இடையூறான சம்பவம் ஏற்பட்டதாக பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

வடஇந்திய மாணவர்கள் ஊர்வலமாக சென்ற போது மதுபாட்டில்களை குடித்துவிட்டு சாலையில் வீசியும், பெண்கள் மீது கலர் பொடி தூவியதால் ஆத்திரமடைந்த வல்லம்படுகை பகுதியில் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட முயன்றனர். பின்னர் அங்கு போலீஸார் சென்று பொதுமக்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். எதிர்காலத்தில் கல்வி பயில வந்துள்ள வடஇந்திய மாணவர்களின் ஊர்வலங்களுக்கு போலீஸார் அனுமதி மறுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.