இந்நிலையில் மாணவரின் பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிச.19-ம் தேதி ஹேப்பியல் ஹார்பஸ் (ஆட்கொணர்வு மனு) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்லூரி மாணவரை கண்டிபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிதம்பரம் நகர போலீஸாருக்கு உத்தரவிட்டார். மாணவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சிதம்பரம் போலீஸார் 4 முறை காலஅவகாசம் பெற்றனர். இந்நிலையில் இன்று(பிப்.18) சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவர் காணாமல் போன வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாஷா, தேவதாஸ் ஆகியோர் மாணவர் முகமதுபைசல் மாயமான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.