சிவகங்கை பாஜக பிரமுகர் கொலையில் இருவர் சரண்
கடந்த 14ம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கன்னங்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் படைவென்றான் என்பவர் சிலரால் வெட்டிப் படுகொலை


கடந்த 14ம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கன்னங்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் படைவென்றான் என்பவர் சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இவரது கொலை வழக்கில் தொடர்புடையதாக இருவர் இன்று காலை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் பொன்னுடையான் (35), மற்றும் சிவகங்கை மாவட்டம் கன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் மகன் மணி (40) இருவரும் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...