சிதம்பரத்தில் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல்
சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 8 பெ


சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 166 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸார் இழுத்து, குண்டு, கட்டாக தூக்கி பஸ்ஸில் ஏற்றினர். இதனை கண்டித்து கைது செய்யப்பட்ட கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் திருமண மண்டபத்தில் உள்ளுருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் பாதிப்பினை முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சிதம்பரம் பஸ்நிலையம் முன்பு வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருபிரிவினர் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் இழுத்து, குண்டு, கட்டாக தூக்கி பஸ்ஸில் ஏற்றி கைது செய்தனர். இதில் சில விவசாயிகள் காயமுற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்ளிட்ட 167 பேரை கைது செய்து தெற்குவீதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர்.
போலீஸாரை கண்டித்து உள்ளுருப்பு உண்ணாவிரதப் போராட்டம்: மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தாக்கி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்த போலீஸாரை கண்டித்தும், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வராததை கண்டித்தும் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் மதியஉணவு சாப்பிடாமல் உள்ளுருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.தனசிங், வேளாண் உதவி இயக்குநர் ரமேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பயிர் பாதிப்பு குறித்து மறு கணக்கீடு செய்வதாகவும், போலீஸார் இழுத்து சென்று கைது செய்தது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உதவிஆட்சியர் தெரிவித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்று உணவு சாப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...