சிதம்பரம் நகைக்கடையில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை:நாலரை கிலோ தங்கம் பறிமுதல்
சிதம்பரம் கீழசன்னதியில் உள்ள நகைக்கடை மற்றும் காசுக்கடைத்தெருவில் உள்ள வீடு, வட்டிக்கடை ஆகியவற்றில் கடலூர்


சிதம்பரம் கீழசன்னதியில் உள்ள நகைக்கடை மற்றும் காசுக்கடைத்தெருவில் உள்ள வீடு, வட்டிக்கடை ஆகியவற்றில் கடலூர் மாவட்ட வருமானவரித்துறை அதிகாரியினர் கடந்த இருதினங்களாக திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சிதம்பரம் கீழசன்னதியில் குண்டலகாரராவ்சேட் மகன்கள் மங்கேஷ்குமார் (37), மனோஜ்குமார் (35) ஆகிய இருவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் காசுக்கடைத்தெருவில் வீடு மற்றும் வட்டிக்கடையும் உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட வருமானவரித்துறை அதிகாரியினர் மேற்கண்ட நகைக்கடை மற்றும் வீடுகளில் கடந்த இரு தினங்களாக திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டிலிருந்த நாலரை கிலோ தங்கம், ரூ.3 கோடி மதிப்பிலான சொத்திற்கான பத்திரங்கள், முத்திரை தங்கத்தை தேசிய மயமாக்கப்பட்டவங்கியில் விவசாயிகள் பெயரில் வைத்து கடன் பெற்றதற்கான ரூ.6 கோடி மதிப்பிலான ஆவணங்கள் ஆகியவற்றை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...