சிதம்பரம் அருகே பொதுப்பாதையில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் அருகே சாரதாராம் நகரில் பொதுப் பாதையில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் மற்றும்


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் அருகே சாரதாராம் நகரில் பொதுப் பாதையில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒருவார காலம் அவகாசம் அளித்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார் திரும்பிச் சென்றனர்.
சிதம்பரம் வட்டம் உசுப்பூர் கிராமத்தில் சாரதாராம் நகர் அமைந்துள்ளது. அந்த நகரில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதையில் விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்றது. கட்டுமானத்தை தடுக்கக்கோரி கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கட்டுமானப் பணிக்கு 25-1-2012ல் சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.மேலு்ம் உசுப்பூர் ஊராட்சி மன்றம் மற்றும் சிதம்பரம் கோட்டாட்சியரால் சாரதாராமின் பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில் கட்டுமானத்தால் இந்நகரின் கீழ்புறம் அமைந்துள்ள மனைகளுக்கு சுலபமாக செல்லக்கூடிய வழிக்கு இடையுறாக அமையும். மேலும் அப்பகுதியில் கான்சாகிப் வாய்க்காலில் பாலம் அமைக்க அப்பகுதி மக்களால் கோரப்பட்டு வருவதாகவும், மேற்படி பாலம் அமைந்தால் அண்ணாமலைநகரிலிருந்து எவ்வித இடையூறின்றி தேசிய நெடுஞ்சாலை 45A சிதம்பரம்- சீர்காழிக்கு இந்த ஊராட்சி வழியாக அனைத்து வாகனங்களும் சிதம்பரம் நகரினுள் நுழையாமல் செல்ல ஒரு பிரதான அகலமான புறவழிச்சாலை போல் அமைய வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் பொதுப்பாதையில் கட்டப்பட்டுள்ள கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஊராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் உள்ள கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விநாயகர் கோயில் கட்டுமானத்தை முழுமையாக அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர், சிதம்பரம் வட்டாட்சியர் ஆகியோருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் 11-2-13 ல் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் சனிக்கிழமை விநாயகர் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர். அப்போது பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.ஸ்ரீதர், இந்து முன்னணி அமைப்பாளர் ஜோதி.குருவாயூரப்பன் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காலஅவகாசம் கேட்டனர். வருவாய்த்துறையினர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டதால் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...