கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் ஒருவர் கொலை! வீட்டிற்கு தீவைப்பு

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 பேர் கொண்ட கும்பலால் வீட்டிற்கு தீவைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2013, 5:54 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 பேர் கொண்ட கும்பலால் வீட்டிற்கு தீவைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே வடமூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சம்பத் (47). கொத்தனார் வேலை செய்யும் இவர் வீட்டில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் தேர்தல் முன்விரோதம் காரணமாக சம்பத் வீட்டிற்து தீ வைத்தனர். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த சம்பத்தை கத்தி, இரும்பு பைப், சுத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள். இறந்து போன சம்பத்திற்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.