கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

நாகை-கடலூர் மாவட்ட எல்லையில் சிதம்பரம் இளைஞர் கொலை!

கடலூர் மாவட்டத்திற்கும், நாகை மாவட்டத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கொடியம்பாளையம் எனுமிடத்தில் சிதம்பரத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

Updated On :2 ஜனவரி 2013, 6:28 am

கடலூர் மாவட்டத்திற்கும், நாகை மாவட்டத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கொடியம்பாளையம் எனுமிடத்தில் சிதம்பரத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில்தெரு மடவிளாகத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் மகன் சரவணன் (25). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக வாலிபர் சங்க நகர்குழு உறுப்பினராக உள்ள இவர் கடலூர் மாவட்டத்திற்கும், நாகை மாவட்டத்திற்கும் இடையே சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கொடியம்பாளையம் எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டு பிரதே பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.