இது குறித்து ராமநகரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுபம் அகர்வால், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூர், ராமநகரம் மாவட்டங்களில் சிறுநீரக மோசடி நடைபெற்றுவருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலி ஆவணங்களை கொடுத்து சிறுநீரக அறுவைமாற்று சிகிச்சை தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அரசு அதிகாரிகளின் கூட்டுசதியும் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் ஆய்வாளர் சி.டி.ஸ்ரீகாந்த், மகாதேவா, கோபால், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒப்பந்தப்பணியாளர் ராஜண்ணா, மஞ்சுநாத், ஆனந்த், வருவாய்துறை அலுவலர் ரஞ்சன் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளோம்.