பலாத்கார குற்றவாளிகளை திங்களன்று ஆஜர்படுத்த நோட்டீஸ்
தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கி பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. இதில் தொடர்புடைய 1 குற்றவாளி 17 வயது ஆவதாக பள்ளிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளதால், குற்றப்பத்திரிக்கையில் அவனது பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அவனது வயதை அறிய பரிசோதனை நடத்தப்பட்ட பிறகுதான் அவனை எந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரிப்பது என்பது தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...