3 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசு!

பொள்ளாச்சி முத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பசு ஒரே பிரசவத்தில் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது.
3 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசு!
Updated on
1 min read

பொள்ளாச்சி முத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பசு ஒரே பிரசவத்தில் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது.
 கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்டது முத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் துரைசாமி (40). விவசாயம் செய்து வருகிறார். இவர் 5 பசுக்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு கடந்த வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் ஒரு பெண் கன்று, 2 ஆண் கன்றுகள் என மொத்தம் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது.
 இதுகுறித்து விவசாயி துரைசாமி கூறியது: கிணத்துக்கடவு அரசு கால்நடை மருத்துவமனையில் இந்த பசுவிற்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டது. தற்போது இந்தப் பசு மூன்று குட்டிகளை ஈன்றது அதிசயமாக உள்ளது என்றார்.
 இதுதொடர்பாக, பொள்ளாச்சி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் பி.நாகராஜன் கூறியது: சாதாரணமாக ஒரு பசு மாட்டில் ஒரு கருமுட்டை உருவாகி, ஒரு கன்றுக் குட்டி மட்டும் ஈன்றும். இந்தப் பசு செயற்கை முறையில் கருவூட்டப்பட்டதால், 2 கருமுட்டைகள் உருவாகின. அதில் ஒரு கருமுட்டை இரண்டாகப் பிரிந்து 2 ஆண் கன்றுக் குட்டியாகவும், ஒரு கருமுட்டை பெண் கன்றுக் குட்டியாகவும் உருவாகி உள்ளது. மூன்று குட்டிகளும் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளது.
 15 ஆண்டுகளுக்கு முன் அரசம்பாளையம் கிராமத்தில் இதுபோன்று, ஒரு பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com