பாமக இளைஞர்களுக்கு மொழி, பண்பாடு, கலை. நாகரீகத்தை பின்பற்றுங்கள், வன்முறை, தீவிரவாதம், ஆபாசம், பெண்ணடிமை, பாலியல் வன்முறை உள்ளிட்டவையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்கவும் உறுதி கூறி வழிகாட்டி வருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக கூறும் ஒரு கட்சி தலைவர் அந்த சமுதாய இளைஞர்களுக்கு அத்துமீறு, அடங்கமறு, ஆர்த்தெழு, திமிரிஎழு, திருப்பிஅடி என அறிவுரை கூறுகிறார். இது இளைஞர்களை எங்கோ கொண்டு விட்டுவிடும். இது சமுதாய நல்லிணகத்திற்கு, அமைதிக்கு வழி வகுக்காது. எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற சமூக நல்லிணக்க கட்சி அல்ல. பக்குவப்பட்ட அரசியல் கட்சியும் இல்லை.