மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஏரிக்கரையில் மினி டெம்போ கவிழ்ந்து ஒருவர் சாவு: 10 பேர் காயம்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சின்னநெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் இன்று துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு மின்டெம்போ லாரியில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள டி.நெடுஞ்சேரி கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது

News image
Updated On :5 ஜனவரி 2013, 2:03 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம்ஏரிக்கரை சாலையில் மின் டெம்போ லாரி கவிழ்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சின்னநெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் இன்று துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு மின்டெம்போ லாரியில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள டி.நெடுஞ்சேரி கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வீராணம்ஏரிக்கரை சாலையில் கூளப்பாடி எனுமிடத்தில் வேன் கவிழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பாலு (45) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் மாசிலாமணி, கிருஷ்ணன், ராமலிங்கம், கணேசன், சேகர், வீரமணி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்து காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.