வீடு புகுந்து திருட முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் மகனை பிடித்து கொடுத்த மக்கள்
சிதம்பரம் முத்தையாநகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நர்சிங் துறையில்


சிதம்பரம் முத்தையாநகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நர்சிங் துறையில் டெக்னீஷியனாக பணியாற்றுகிறார். நேற்று (ஜன.7) இரவு சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் என்பவரது மகன் அரவிந்த் (21) நண்பர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் முத்தையாநகருக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரன் வீட்டின் மதில்சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கூச்சலிட்டு அரவிந்தை பிடித்தனர். சதீஷ் தப்பிஓடிவிட்டார். வீடு புகுந்து திருட முயற்சித்தாக கூறி பிடிபட்ட அரவிந்தை அப்பகுதி மக்கள் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...