மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வீடு புகுந்து திருட முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் மகனை பிடித்து கொடுத்த மக்கள்

சிதம்பரம் முத்தையாநகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நர்சிங் துறையில்

News image
Updated On :8 ஜனவரி 2013, 11:46 am

G.Sundararaj

சிதம்பரம் முத்தையாநகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நர்சிங் துறையில் டெக்னீஷியனாக பணியாற்றுகிறார்.  நேற்று (ஜன.7) இரவு சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் என்பவரது மகன் அரவிந்த் (21)  நண்பர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் முத்தையாநகருக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரன் வீட்டின் மதில்சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கூச்சலிட்டு அரவிந்தை பிடித்தனர்.  சதீஷ் தப்பிஓடிவிட்டார்.  வீடு புகுந்து திருட முயற்சித்தாக கூறி பிடிபட்ட அரவிந்தை அப்பகுதி மக்கள் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.