கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

பொங்கலன்று கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு முடிவு

பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்துவது என அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர்

Updated On :10 ஜனவரி 2013, 3:40 pm

பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்துவது என அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம் பல்கலைக்கழக பூமாகோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரா.உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு: பல்கலைக்கழக நிர்வாகம் சம்பள குறைப்பையும், ஆட்குறைப்பையும் இல்லை என உறுதிமொழி அளித்துவிட்டு, அதை மீறும் விதமாக தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்புத்தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய  சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரும்பொங்கலாக மாற்றிவிட்டது. எனவே வருகிற ஜன.14-ம் தேதி பொங்கல் தினத்தன்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்துவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.