அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதி மோதல்: நால்வர் காயம்: 9 பேர் கைது: பதற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிரிககெட் வெற்றி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதி மோதலில் நால்வர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :15 ஜனவரி 2013, 3:16 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிரிககெட் வெற்றி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதி மோதலில் நால்வர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 8 பேரை தேடி வருகிறார்கள். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இப் பகுதியில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு பிரிவினரிடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது மோதல்கள் நடைபெறும்.

இந்நிலையில் வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரு சமுதாயத்தினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதில் வத்திராயிருப்பு தேவர் அணியினரை ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த அணியினர் வென்றுள்ளனர். இதனையடுத்து மைதானத்தைவிட்டு வெளியே வரும்போது வெற்றி பெற்ற அணியினர் ஆராவாரம் செய்து கொண்டு வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

அப்போது விளையாட்டு நடைபெற்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர், எங்கள் ஊரில் வந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு நீங்கள் எப்படி வெற்றியைக் கொண்டாடலாம் என்று கூறி அவர்களைத் தாக்கியுள்ளார்கள்.

இதில் சுந்தரபாண்டியம், தாட்கோ காலனியைச் சேர்ந்த மலைராஜ் மகன் பிரபாகரன் (26), ஊரணிமுத்து மகன் முத்துக்குமார் (18), சட்டநாதன் மகன் சுரேஷ்கிரி (20) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

வத்திராயிருப்பு போலீஸில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோபாலபுரம், சூசை மகன் சுந்தரமூர்த்தி (22), சஞ்சீவி மகன் சுந்தர்ராஜ் (22), ராமர் மகன் ஜெயராஜ் (24), அய்யப்பன் மகன் கோபால் (25), தவமணி மகன் உதயராஜன் (23), தவமணி மகன் டைமன்ட்ராஜ் (25), ஆழ்வார் மகன் கோவிந்தராஜ் (22), தன்னாசி மகன் தங்கபாண்டி (22), சண்முகம் மகன் இசக்கிபாண்டி (19) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக செம்பட்டி விலக்கு சேசபுரம் அருகே வத்திராயிருப்பு, ரோட்டடி தெருவைச் சேர்ந்த எஸ்.சீனிவாசன் செட்டியார் மகன் நாகராஜ் (39) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில், தனது செங்கல்சூளையில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சுந்தரபாண்டியம் தாட்கோ காலனியைச் சேர்ந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்துள்ளது. அவர் நான் செட்டியார் சமுதாத்தைச் சேர்ந்தவன். என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். கும்பல் உன்னைப் பார்த்தால் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவன் போல் உள்ளது என்று கூறி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து செல்போனை உடைத்துள்ளது.

இது குறித்து நாகராஜ், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ம.மலையரசன், மு.பால்பாண்டி, வா.சந்தனராஜ், பா.வனராஜ், ச.பாலமுருகன், ச.கந்தவேல், வ.மூர்த்தி, வ.வெயிலுமுத்து ஆகிய 8 பேர் மீது  வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இவர்களை தேடி வருகிறார்கள்.

இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் தீவிர பந்தோபஸ்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.